மாணவர்களின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..! மாணவர்களின் பொற்காலம் என்பதற்கு ஆதாரம் இதோ…

மாணவர்களின் மனம் கவர்ந்த ஆட்சி என்றால, எடப்படி பழனிசாமியின் ஆட்சியைத்தான் சொல்ல வேண்டும். ஆம், மாணவர்களின் தேவைகளை அறிந்து, செயல்பட்டு வருகிறார்.


எடப்பாடியார் கல்விக்கும் தமிழுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஆகவே, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இன்று பள்ளியில் ஒவ்வொரு வகுப்புகளிலும் கணினி வழி கல்வி, ஸ்மார்ட் கிளாஸ் என அரசு பள்ளிகளில் இன்றைய நவீன முறைகள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.

இது மட்டுமின்றி, முட்டையுடன் கூடிய சத்துணவு, இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள் காலணிகள், லேப்டாப், சைக்கிள் என அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையானவற்றை அள்ளிக் கொடுக்கிறது எடப்பாடி அரசு. இதன் காரணமாகவே அரசு பள்ளிகள் மீது மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கவனம் திரும்பியிருக்கிறது.

அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் நலன் பேணுவதிலும் எடப்பாடி அரசு சிறப்பு கவனம் எடுத்து வருகிறது. ’’ இந்த கொரோனா சமயத்தில் மற்ற மாநிலங்களில் ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதம் குறைத்தே வழங்கப்படுகிறது. ஆனால் எடப்பாடி அரசோ எங்களுக்கு 10 மாதங்களாக முழு சம்பளம் அளித்து வருகிறது. இதற்கு நன்றிக்கடனாக வரும் காலங்களில் எங்கள் பணியை முன்பைவிட உற்சாகாமாக செய்வோம்’’ என்கிறார்கள் ஆசிரியர்கள்.

இவை எல்லாவற்றையும் விட மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்கிற எடப்பாடி அரசின் சாதனை நடவடிக்கைக்கு பின்னர் அரசு பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் கூட்டம் அதிகரித்திருக்கிறது.

அதனால்தான் மாணவர்கள் எடப்பாடியாரின் காலத்தை பொற்காலம் என்கிறார்கள்.