விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு அவல், பொறி, மோதகம் படைப்பதற்கான காரணம் இதுதான் !

வருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


முழுமுதற்கடவுளாக வணங்கப்படும் தெய்வம் விநாயகப் பெருமான் ஆவார் .விநாயகர் கஜமுகன் யானைமுகன் விக்னேஸ்வரன் ஐங்கரன் கணபதி என பல்வேறு பெயர்களால் பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு மோதகம், அவல் ,பொறி போன்ற பொருட்களை படைத்து விநாயகப் பெருமானை வழிபட வேண்டும் . குறிப்பாக ஏன் எந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன .

மோதகத்தில் வெளிப்பகுதி வெள்ளை நிறமாகவும்,உள்பகுதியில் பூரணம் வைக்கப்பட்டு மஞ்சள் நிறமாகவும் இருக்கும் .ஒருவர் மனதினை வெண்மையாக வைத்துக் கொண்டால் , கண்ணுக்குத் தெரியாத இறைவனை சென்றடைய முடியும் என்ற அடிப்படையிலேயே மோதகம் விநாயகருக்குப் படைக்கப் படுகிறது .

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்களை ஊதித் தள்ள வேண்டும் என்பதற்காகவே , எளிதாக ஊதி தள்ளக்கூடிய அவல்பொரி விநாயகருக்கு படைக்க படுகிறது .