மஞ்சள் கருவிற்கு பதில் பச்சை நிற கருவுடன் முட்டையிடும் அதிசய கோழிகள்..! எங்கு தெரியுமா?

கேரளாவில் கோழிகள் பச்சை கருவில் முட்டை போடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


கேரளா மாநிலத்தில் மல்லபுரம் மாவட்டத்தில் ஒத்துக்குங்கல் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு ஷீகாபுதீன் என்பவர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். 9 மாதங்களுக்கு முன்னர் அந்த கோழிப்பண்ணையில் ஒரு கோழியானது பச்சை கருவில் முட்டைகள் போட்டன.

இதன் புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரிதளவில் வைரலாகின. இதுகுறித்து அவர் கூறுகையில், " 9 மாதங்களுக்கு முன்னர், முதன்முறையாக எங்களுடைய பண்ணையில் இருந்த கோழிகள் 2 பச்சை கருமுட்டைகளை ஈன்றன. தவிர முட்டைகளும் வினோதமாக இருந்ததால் நாங்கள் முதலில் அவற்றை உட்கொள்ளவில்லை.

சமூக வலைத்தளங்களில் நான் அந்த முட்டையின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திருந்தேன். அப்போது கேரளா கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழக மாணவர்கள் என்னுடைய கோழி பண்ணைக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கோவில்கள் புதுவகையான தீவனங்களை சாப்பிட்டு இத்தகைய பச்சை கருமுட்டைகளை ஈன்றன என்று கூறுகின்றனர். நான் அத்தகைய புதுவகையான உணவுகள் எதையும் கலக்கவில்லை. 

இந்த முட்டைகளும் சாப்பிடுவதற்கு சாதாரண முட்டை போன்றே அமைந்துள்ளன. ஆகையால் தற்போது நாங்கள் இந்த முட்டைகளை சாப்பிட்டு வருகிறோம். ஆராய்ச்சி முடிவுகள் வெளியான பிறகு நாங்கள் அவற்றை சந்தையில் இருப்பது குறித்து முடிவெடுக்கவுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.