நீலகிரி அவலாஞ்சியில் வரலாறு காணாத பெரும் மழை! சமூக ஆர்வலர்களே தயாராக இருங்கள்!

கடந்த வாரம் முதலே ஊட்டி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் தொடர்ந்து பெய்த மழையால் ஊட்டியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் மூடப்பட்டுவிட்டன.


பிரதான சாலைகள் மண் சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஊட்டி முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது. சாலைகளை சீர் செய்யும் பணியில் தீயணைப்புப் படையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் நேற்று நீலகிரி அவலாஞ்சியில் ஒரே நாளில் 82 சென்டிமீட்டர் மழையாம். தமிழக வரலாற்றிலேயே இது போன்ற மழையைக் கண்டதில்லை என்கிறார்கள். அவலாஞ்சி ஒரு காடு சூழ்ந்த பகுதி. அங்கு 82 சென்டிமீட்டர் மழை ஒரே நாளில் என்றால் இது இயற்கையின் கோரதண்டவம் இது. 

இந்த நிலயில் கோவையில் கடந்த இரண்டு நாட்களாகவே மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் உண்மையான சேத விவகாரம், பாதிப்பு போன்ற எதுவுமே இன்னமும் வெளிவரவே இல்லை. 

நிச்சயம் அதிக பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதனால் சமூக ஆர்வலர்களே தயாராக இருங்கள். உதவி தேவைப்படுபவர்களை காப்பாற்றுவோம்.