வரலாறு காணாத வெயில்! சுழன்றடிக்கும் வெப்பக் காற்று! மயங்கி விழுந்து உயிரிழந்த 3 ஆயிரம் பேர்!

வெப்ப அலையின் காரணமாக 2964 பேர் இறந்துள்ள சம்பவமானது நெதர்லாந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில மாதங்களாகவே ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலையானது மக்களை புரட்டி எடுத்து வருகிறது. ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இந்த ஆண்டு மிகுதியான வெப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 22-ஆம் நாள் முதல் நெதர்லாந்து நாட்டில் கிட்டத்தட்ட 3000 பேர் வெப்பம் தாங்காமல் இறந்துள்ளனர். தட்பவெப்பமானது கிட்டத்தட்ட 45 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகிவிட்டது. இதனால் மக்களால் இயல்பான வாழ்க்கையை வாழ இயலவில்லை.

சாதாரண வெப்ப காலத்தை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமான மக்கள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தகவலைக நெதர்லாந்து நாட்டின் அரசு ஸ்டாடிஸ்டிக்ஸ் குழுவினர் வெளியிட்டனர்.80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கிட்டத்தட்ட 300 பேர் இறந்துள்ளனர். மேலும், இந்த வெப்ப அலை அழகு முக்கியமாக கிழக்கு நெதர்லாந்து பகுதிகளில் அதிக அளவில் தாக்கியுள்ளது.

வானிலை ஆராய்ச்சியாளர்கள் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அதிகரிப்பினால் இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த சம்பவமானது ஐரோப்பிய நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.