நெஞ்செரிச்சல் இருந்தால் குழந்தைக்கு நிறைய தலைமுடியா?

கர்ப்பம் குறித்த ஒருசில மூட நம்பிக்கைகள் எப்படி உருவானது என்று நினைக்கவே ஆச்சரியமாக இருப்பதுண்டு. ஏனென்றால் எவ்வித தொடர்பும் இல்லாமலே சில மூட நம்பிக்கைகள் இருப்பதுண்டு. அப்படிப்பட்ட ஒன்றுதான் கர்ப்பிணிக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுவது சம்பந்தப்பட்ட விஷயம்.


• கர்ப்பிணிக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நிறைய முடி இருப்பதாக அர்த்தம் என்று சொல்வார்கள்.

• இந்தக் கூற்றில் துளியளவும் உண்மை கிடையாது. ஏனென்றால் நெஞ்செரிச்சல் உள்ள பெண்களுக்கு தலையில் முடியே இல்லாமல் குழந்தை பிறப்பதுண்டு.

• கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவது சகஜமான ஒரு பிரச்னை. ஆனால் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு முழுக்க முழுக்க ஜீரண கோளாறுதான் காரணமாக இருக்கிறது.

• எப்போதாவது ஒரு முறை நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் கவலைகொள்ளத் தேவையில்லை. அடிக்கடி நெஞ்செரிச்சல் இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்ய வேண்டியது அவசியம்.

சரியான உணவு முறை, சரியான உறக்கம், நல்ல ஓய்வு போன்றவை இருந்தால் கர்ப்பிணிகளுக்கு நெஞ்செரிச்சல் அதிகம் ஏற்படுவதில்லை. அதனால் நெஞ்செரிச்சல் வந்தால், குழந்தைக்கு தலைமுடி அதிகம் இருப்பதற்கான அறிகுறி என்று அலட்சியம் செய்யக்கூடாது.