நோயின்றி குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

குழந்தைகள் சளித் தொல்லைகளில் தான் மிகவும் துன்பப்படுகிறார்கள். பால் உணவுதான் சளி உண்டாவதற்கு முக்கிய காரணம்.


நாம் குழந்தைகளை வளர்ப்பதற்கு பால் உணவை மட்டுமே நம்பி இருப்பதாலும், குழந்தைக்கு தேவையான பாலை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக பால் உணவைத் தருவதாலும் மார்பில் சளி அதிகமாக உற்பத்தியாகி இருமல் போன்ற தொல்லைகள் அதிகமாகின்றன.

இவற்றிலிருந்து விடுதலை பெற குழந்தைகளுக்குத் தரும் பாலின் அளவை பாதிக்கு மேலே குறைத்துவிடவேண்டும்.  தாய்ப்பாலை நிறுத்தக்கூடாது.  2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சளித் தொல்லை ஏற்படும் பொழுது காலை மாலை இரண்டு தடவை தண்ணீர் கலக்காத பழச்சாறுகள் ஒரு டம்ளர் கொடுத்தாலே போதும். தண்ணீர் கலந்த பழச்சாறுகள் கொடுத்தால் தினசரி நான்கு தடவை கொடுக்கலாம். பழங்களை சாறு பிழியாமல் நேரடியாகச் சாப்பிடுவது மிகவும் நல்லது.  பழச்சாறுகளை சொட்டு சொட்டாக ருசித்து மெதுவாகச் சாப்பிட்டால்தான் அதன் முழு பலன் கிடைக்கும். பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் எந்த பழச்சாறுகளையும் சாப்பிடக் கூடாது.  இயற்கை உணவு கொடுப்பதை அதிகரித்தால் சளி தொல்லை குறைந்து குழந்தைகள் நலமுடன் வாழ்வார்கள்.  நோய் என்ற விதை சளி நிறைந்த உடம்பில் தான் எளிதாக வளரும்.  சளியில்லாத உடம்பில் நோய் என்ற விதை வளரவே வளராது.

குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக வளர வேண்டுமென்றால் முடிந்தவரை மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் முதலியவற்றிலிருந்து விடுவித்து இயற்கை உணவில் குழந்தையை வளர்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்.