முதல்வர் எடப்பாடியாரின் ஆரோக்கிய மேம்பாட்டு திட்டங்கள். மதுரை, கோவைக்கு நல்ல செய்தி.

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ஆறு தளங்கள் கொண்ட புதிய கட்டடத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதேபோன்று கோவை மருத்துவமனையிலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்டுமானப் பணியை தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர்.


மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 121.80 கோடி மதிப்பில் 22,580 ச.மீ பரப்பளவில் ஆறு தளங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி சென்னையிலிருந்து அடிக்கல் நாட்டினார்.

மதுரையில் நடைபெற்ற கால்கோள் விழாவில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆறு தளங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி கட்டடத்தில் இருதய அவசர நிலைத்துறை, 22 அறுவை சிகிச்சை அரங்குகள், மருத்துவ சேவை பிரிவுகள், கேத் ஆய்வகம், இமேஜிங் மையம் உள்ளிட்ட அதி நவீன சிகிச்சை பிரிவுகள் அமைய உள்ளன.

அதேபோன்றுகோவை அரசு மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்ட ரூ.110 கோடியில் புதிய கட்டுமான பணிக்கான பூமி பூஜையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.  

கோவை அரசு மருத்துவமனை கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு வந்து செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவி அளிக்க முன் வந்ததுதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பழைய அவசர சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வந்த பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தன.

அதன் தொடர்ச்சியாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று நடை பெற்றது.இதுகுறித்து டீன் காளிதாஸ் கூறும்போது, கோவை அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்டுமான பணிகளுக்கு ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது 7 மாடி கட்டிடங்களை கொண்டது. இங்கு அவசர சிகிச்சை பிரிவு, அதி நவீன அறுவை சிகிச்சை அரங்கு உள்பட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன