உன்னை கட்டி பிடிக்க நினைத்தேன்! ஆனால் நீ கத்தி விட்டால்..? இளம் பெண்ணுடன் பிரபல நடிகர் பேசிய கிளுகிளு ஆடியோ வைரல்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலின் தலைவர் பெண் ஒருவரிடம் தவறாக பேசியுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருமலை திருப்பதி தேவஸ்தான வழக்கங்களை பிரச்சாரம் செய்வதற்காக 2008-ஆம் ஆண்டில் "ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல்" நிறுவப்பட்டது. இந்த சேனல் குழுமத்தின் தலைவர் வழக்கமாக ஆளுங்கட்சி சார்பில் நியமிக்கப்படுவார். அவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிறகு காமெடி நடிகர் பிரித்திவிராஜை இந்த பொறுப்பில் அமர்த்தினார்.

அதன் பின்னர் சர்ச்சை மேல் சர்ச்சை ஏற்பட்டு வந்தது. அதாவது பிரித்விராஜ் தனக்கு வேண்டிய 36 பேரை பணியில் அமர்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேவஸ்தான குழு அறங்காவலராக சுப்பா ரெட்டி டிசம்பர் மாதத்தில் 30 பேரை வேலையை விட்டு வெளியேற்றினார்.

இந்நிலையில் பிரித்விராஜ் மீண்டும் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது அதே சேனலில் பணிபுரியும் ஒரு பெண்ணிடம் இவர் ஆபாசமாக பேசும் ஆடியோவானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட பெண்ணிடம் "நான் மது அருந்துவதை நிறுத்திவிட்டேன். இனி உன்னுடன் இருக்கும் நேரத்தில் மட்டுமே மது அருந்த முடிவு செய்துள்ளேன். மேலும் அலுவலகத்தில் இருக்கும்போது உன் அழகு என்னை கவர்ந்திழுத்தது. நான் உன்னை கட்டிப்பிடிக்க நினைத்தேன். ஆனால் நீ கத்தி விடுவாய் என்ற அச்சதத்தில் விலகிவிட்டேன்" என்று கூறியிருந்தார்.

இந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, பிரித்திவிராஜ் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் முறையிட்டனர். இந்த விவகாரமானது ஜெகன்மோகன் ரெட்டி அவர்களின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டது. உடனே அவர் பிரித்விராஜ் தன் பதவியை ராஜினாமா செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நேற்று காலை பிரித்திவிராஜ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

இந்த சம்பவமானது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.