வார்த்தைகளால் துடிக்க வைப்பார்! அறுவெறுப்பாக பேசுவார்! தாயின் 2வது கணவன் குறித்து டிவி நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!

பிரபல தொலைக்காட்சி நடிகர் மீது அவரது மனைவியின் மகள் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல தொலைக்காட்சி நடிகரான ஸ்வேதா திவாரி, அபினவ் கோலி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். திடீரென்று ஸ்வேதா திவாரி மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கந்திவாலி பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் தன் கணவர் மீது வன்கொடுமை புகார் அளித்தார்.

இந்த புகாரை பற்றி ஊடகவியலாளர்கள் ஆராய முற்பட்டபோது அதற்கு ஸ்வேதா திவாரி பதில் அளிக்கவில்லை. இதனிடையே ஸ்வேதாவின் மகளான பாலக் திவாரி இந்த புகார் பற்றிய அனைத்து செய்திகளையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

அதாவது, "இந்த தருணத்தில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சில விஷயங்களை சரியாக தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். நானும் என்னுடைய தாயாரும் என்னுடைய தந்தையால் கொடுமைப்படுத்தப்பட்டோம். ஆனால் அவர் எங்களை ஒருபோதும் அடித்ததில்லை.

புகார் அளித்த நாள் மட்டுமே அவர் என் தாயாரை அடித்தார். ஆனால் அவர் வழக்கமாகவே மனதை நோகடிக்குமாறு பல்வேறு கருத்துக்களை கூறுவார். அவற்றின் வலி எனக்கும் என்னுடைய தாயாருக்கும் மட்டுமே தெரியும். ஊடகத்திற்கு என்றைக்கும் நடந்தது தெரியாது. தெரியவும் வாய்ப்பில்லை. இருப்பினும் அவர்கள் மற்றொருவரின் வாழ்க்கையை பற்றி விமர்சிக்கிறோம் என்ற நாகரீகமின்றி செயல்பட்டு வருகின்றனர்.

நீங்களெல்லாம் பாக்கியசாலிகள். ஏனென்றால் என் தாயார் அனுபவித்த திருமண கஷ்டங்களை பெரும்பாலானோர் அனுபவித்திருக்க மாட்டார்கள். என் தாய்க்கு நான் துணையாக இருக்கும் நேரம் வந்துவிட்டது. என் தங்கை என்னை ஒருபோதும் அடித்ததே இல்லை. ஆனால் அவர் கூறிய வார்த்தைகளால் நாங்கள் மனஉளைச்சலுக்கு ஆளானோம். அதனால் தான் என்னுடைய தாயார் அவரை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்" என்று பதிவு செய்திருந்தார். இந்த சம்பவமானது கண்டிவாளி காவல் நிலையத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.