தினம் இரவானால் செ*ஸ் டார்ச்சர்! கணவன் கொடுமை தாங்காமல் பட்டப்பகலில் மனைவி செய்த பகீர் செயல்! சேலம் பரபரப்பு!

குழந்தை பெற்று தராததால் மனைவியை கணவர் கொடுமைப்படுத்தி வந்துள்ள சம்பவமானது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலத்திற்கு அருகே சாமிநாதபுரம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு 32 வயதான ஆரோக்கியமேரி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவரின் பெயர் ஜெயராஜ். ஜெயராஜின் சொந்த ஊர் எடப்பாடி. 9 வருடங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இத்தம்பதியினருக்கு குழந்தையில்லை.

குழந்தை இல்லாத காரணத்தினால் ஜெயராஜின் வீட்டார் ஆரோக்கியமேரியை அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும் வரதட்சணையை கேட்டு ஜெயராஜின் வீட்டார் ஆரோக்கியமேரியை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இன்று காலை ஆரோக்கியமேரி மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு தீ குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை பார்த்த காவல்துறை அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டனர். 

விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் கூறுகையில், "எனக்கு குழந்தைகள் இல்லை என்று அடிக்கடி என் கணவர் என்னிடம் சண்டை போடுவார். மேலும் என்னை பலமுறை வேகமாக எட்டி உதைத்துள்ளார். வயிற்றில் பல தையல்களை போடப்பட்டது. எனக்கு பெற்றோர் இல்லை. ஆதலால் அவர் என்னை அடித்து துன்புறுத்துகின்றனர். தினமும் செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறார்" என்று புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.