வெறும் 22 வயது தான்..! ஐபிஎஸ் அதிகாரியான ஹாசன் சஃபின்! நாட்டிலேயே இளம் போலீஸ் அதிகாரி! குவியும் வாழ்த்து!

இந்தியாவின் இளம்வயது ஐபிஎஸ் அதிகாரியாக குஜராத் மாநிலத்தின் இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


குஜராத் மாநிலத்தில் பனோஸ்கந்தா என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட கனோதார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹாசன் சஃபின். இவருடைய வயது 22. இவர் சென்ற ஆண்டு நடைபெற்ற இந்திய மக்கள் குடிமை தேர்வில் 570-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

தொடர்ந்து ஐ.பி.எஸ் பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது ஜாம்நகர் பகுதியில் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். 23-ஆம் தேதியன்று ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பினும், ஐஏஎஸ் அதிகாரியாக வளர வேண்டும் என்பதே இவருடைய நோக்கமாக உள்ளது.

இருப்பினும் கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு நிறைய சேவைகளை செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் இருப்பதாக கூறியுள்ளார். 22 வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற ஹாசனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன.