மைதானத்தை தாண்டி பந்தை பறக்கவிட்ட தோனி! பயிற்சி வீடியோ செம் வைரல்!

இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றிக்கு, நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனியின் பங்களிப்பு பெரிதாக இருக்கும் என்று அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி நம்பிக்கை அளித்துள்ளார்.


உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. அனைத்து அணைகளும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளனர். ஆனால் இந்திய அணி இன்னும் ஆடத் தொடங்கவில்லை. வரும் 5-ஆம் தேதி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தன் முதல் ஆட்டத்தில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்திய அணியின் உலக கோப்பை வெற்றிக்காண வாய்ப்புகள் மகேந்திர சிங் தோனியின் அனுபவத்தினால் அதிகரிக்கக்கூடும் என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் வர்ணனையாளர்களும் கூறுகின்றனர். அவர்தான் இந்திய அணியின் துரும்புச்சீட்டு என்று பயிற்சியாளர் புகழ்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிலிருந்து இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மகேந்திர சிங் தோனியும் கேஎல் ராகுல் சிறந்த அளவில் பயிற்சியில் ஈடுபட்டனர். டுவிட்டரில் பதிவொன்றில் தோனி சிறப்பாக விளையாடி வருவதாகவும் பந்தினை விரட்டி விரட்டி அடிப்பதாகவும் கூறியுள்ளனர். https://twitter.com/BCCI/status/1135497903663996929?s=19

மகேந்திர சிங் தோனி தன்னுடைய நான்காவது உலக கோப்பையில் விளையாட உள்ளார். இதுவரை 341 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 10,500 ரன்கள் குவித்து உள்ளார். இவருடைய அதிகபட்ச ஸ்கோர் 183 ரன்களாகும்.

சில ஆண்டுகளாக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் குறைந்திருந்தாலும், இந்த வருடம் முடிந்த ஐபிஎல் தொடரில் அவருடைய ஆக்ரோஷமான ஆட்டத்தினை காண வாய்ப்பு கிடைத்தது. அதேபோன்று இந்த உலக கோப்பையிலும் அவர் விளையாண்டால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

ரசிகர்கள் அவருடைய ஆக்ரோஷமான ஆட்டத்திற்கும் நல்ல ஃபாரமிற்கும் இப்போதிருந்தே பிரார்த்தித்து வருகின்றனர்.