கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது இல்லை! தமிழர்களை அதிர வைத்த ப.சிதம்பரம் பேட்டி!

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ப.சிதம்பரத்தை "பூமிக்கு பாரம்" என்று கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்தில் பிரபல தனியார் ஊடகத்திற்கு ப.சிதம்பரம் பேட்டி அளித்திருந்தார். அப்போது தொகுப்பாளினி ப.சிதம்பரமிடம் அரசியல் வட்டாரத்தில் நிகழும் குழப்பங்களை பற்றி கேட்டார்.

குறிப்பாக காஷ்மீர் விவகாரம் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது அவர் கூறுகையில், "காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசானது தவறான முடிவை எடுத்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையான முடிவை மத்திய அரசாங்கம் எடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி 370ஆவது பிரிவை நீக்க முடியாது என்று எப்பொழுதும் கூறவில்லை. ஆனால் அப்பகுதிகளில் வாழும் மக்களின் கருத்துக்களை கேட்டே எந்த முடிவையும் மேற்கொள்ள வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக உள்ளது" என்றார்.

அப்போது தொகுப்பாளினி, "காஷ்மீர் விவகாரத்தில் இவ்வளவு கொதித்தெழும் காங்கிரஸ் கட்சியானது ஏன் கச்சத்தீவு விவகாரத்தில் மௌனமாக இருந்தது" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சிதம்பரம் அவர்கள், கச்சத்தீவு பிரச்சினையானது காலம் காலமாக இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்டு வருகிறது.

கச்சத்தீவு என்பது ஒரு தனி தீவு. இராமநாதபுரம் தாலுகாவில் இருந்ததென்றாலும் அது தனியிடமாகும். இந்தியா முழுவதும் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும். கச்சத்தீவு என்பது இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல. தமிழகத்திற்கு கச்சத் தீவு சொந்தமானது இல்லை. இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வரலாறு பிரச்சினையாகும்" என்று பதிலளித்தார்.

கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது அல்ல என்று ப.சிதம்பரம் கூறியதற்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், "ப. சிதம்பரம் ஒரு சுயநலவாதி. அவரால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை. அவர் இந்த பூமிக்கே பாரமாக உள்ளார்" என்று கடுமையாக விமர்சித்தார். இந்த விமர்சனமானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.