அவன் ரொம்ப கருப்பா இருக்கான்..! என்னால் அவன் கூட முடியாது..! தாலி கட்டுவதை நிறுத்தி மணமகள் கூறிய அதிர்ச்சி காரணம்!

மணமகன் தனக்கு ஈடான அழகில் இல்லாததால் மணமகள் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் கான்பூர். இங்கு இந்திய முறைப்படி 24-ஆம் தேதியன்று ஒரு திருமணம் நடந்து கொண்டிருந்தது. மணமகனின் பெயர் செஹ்ரா. மணமகள் முக்காடு அணிந்தபடி மணமகனின் அருகில் அமர்ந்திருந்தார். இரு வீட்டு உறவினர்களும் திருமணத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். 

அப்போது திடீரென்று மணமகள் திருமணத்தை நிறுத்துமாறு அலறியுள்ளார். காரணத்தை கேட்டபோது செஹ்ரா கருப்பாக இருந்ததாலும், அதிக வயது உள்ளவரை போன்று தோற்றமளித்து இருந்ததாலும் திருமணம் செய்துகொள்ள பிடிக்கவில்லை என்று மணப்பெண் கூறியுள்ளார்.

இருவீட்டாரும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்த போதிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இறுதியாக புகரானது காவல் நிலையத்திற்கு சென்றது. அன்று மாலை இருவீட்டாரும் ஒன்றாக அமர்ந்து காவல்நிலையத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மணமகன் வீட்டார் திருமணத்திற்காக செய்த அனைத்து செலவுகளையும் மணமகளின் பெற்றோர் திருப்பி தருவதாக கூறியதை தொடர்ந்து இரு வீட்டாரையும் காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது கான்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.