காதலித்து ஆசை ஆசையாக திருமணம் செய்த 20 நாளில் பெண் என்ஜினியர் எடுத்த பகீர் முடிவு! அதிர வைக்கும் காரணம்!

திருமணமான 20 நாட்களிலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திரா மாநிலத்திலுள்ள ஹைதராபாத் நகரில் பூர்ணிமா என்ற இளம்பெண் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார்.

இவரும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே பூர்ணிமாவின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி 20 நாட்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணத்தில் பூர்ணிமாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று பூர்ணிமா, கார்த்திக்கின் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தகவலை அறிந்த பூர்ணிமாவின் உறவினர்கள் கார்த்திக், பூர்ணிமாவை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சனாத்நகர் காவல்நிலையத்தை பூர்ணிமாவின் பெற்றோர் முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது சனாத்நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.