காதலனிடம் இருந்து மகளை கதற கதற பிரித்தவர் சேரன்! வைரலாகும் ஒரிஜினல் வீடியோ!

லாஸ்லியாவை கவினிடமிருந்து சேரன் எவ்வாறு பிரிப்பார் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.


இந்த பிக்பாஸ் சீசனில் லாஸ்லியா மற்றும் கவினின் காதல் கதை வலம் வருகிறது. லாஸ்லியாவை கவின் ஏமாற்றுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். பிக் பாஸ் வீட்டில் சேரனை, லாஸ்லியா தன்னுடைய அப்பாவை போன்று பாவித்து வருகிறார். சேரனும் கவினிடமிருந்து லாஸ்லியாவின் பிரித்துவிட வேண்டும் என்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டுக்கு சென்ற லாஸ்லியாவின் தந்தையும், "காதல் கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம் ஒழுங்காக கேம் விளையாடு" என்று அறிவுரை கூறினார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் நிறைய கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. சில சேரன் தன்னுடைய சொந்த மகளையே பிரிந்துதான் வாழ்கிறார் என்று கமெண்ட் செய்திருந்தனர். 

அதாவது, சேரனின் மனைவியின் பெயர் செல்வராணி. இத்தம்பதியினருக்கு நிவேதா மற்றும் தாமினி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் தாமினி, சூளைமேட்டில் வசித்து வந்த டான்சர் சந்துரு என்பவரை காதலித்து வந்தார். சந்துருவின் நடவடிக்கைகள் சரியில்லை என்பதால் சேரன் இவர்களுடைய காதலை ஒப்புக்கொள்ளவில்லை. 

ஆனால் தாமினி சந்துருவை தான் ‌ திருமணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்துள்ளார். சேரன் மீது தாமினி அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காவல்துறை அதிகாரிகள் 2 வாரங்களுக்கு தாமினியை யோசிக்குமாறு அறிவுரை செய்தனர். 

அந்த இடைவேளையில் சேரனின் அறிவுரையை உணர்ந்து தாமினி அவருடன் இணைந்து செல்ல சம்மதித்தார்.  

இதனால் நெட்டிசன்கள் சிலர், சேரனுக்கு காதல் பிடிக்காததால் காதலை பிரிப்பதற்காக இவ்வாறு நாடகமாடுகிறார் என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.