உனக்கு காரெல்லாம் கிடையாது...! நடந்தே போ..! ரஜினியை அவமானப்படுத்திய தயாரிப்பாளர்! தர்பார் பட விழாவில் வெளியான பகீர் தகவல்!

பிரபல தயாரிப்பாளர் தன்னை அவமானப்படுத்தியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் அடுத்து "தர்பார்" திரைப்படம் வெளிவரவுள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. 

அதாவது அவர் நடிக்க தொடங்கிய காலம் அது. "16 வயதினிலே" பிரம்மாண்ட வெற்றியாகி ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு தயாரிப்பாளர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு வந்துள்ளார். அவருடைய கால்ஷீட் கேட்டு அந்த தயாரிப்பாளர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். அனைத்தும் பேசி முடித்துவிட்டு ரஜினிகாந்த் 1000 ரூபாய் அட்வான்ஸ் கேட்டுள்ளார். அதற்கு அந்த தயாரிப்பாளர் தற்போது பணம் இல்லை என்றும், நாளை கொடுத்தனுப்பி விடுவதாக கூறியுள்ளார்.

மறுநாள் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்ற பிரொடக்ஷன் மேனேஜரும் பணம் எடுத்து செல்லவில்லை. இதுகுறித்து ரஜினிகாந்த் தயாரிப்பாளருக்கு கால் செய்து கேட்டுள்ளார். அப்போது அவர் மேக்கப் போடுவதற்கு முன்பு பணத்தை தருவதாக ரஜினிகாந்திடம் கூறியுள்ளார்.

மறுநாள் காலையில் ஷூட்டிங்கிற்கு சென்றபோது மேக்கபிற்கு முன்பு பணம் தரவில்லை என்பதால் ரஜினிகாந்த் மேக்கப் போட மாட்டேன் என்று கூறியுள்ளார். உடனே வந்த தயாரிப்பாளர் ரஜினிகாந்திடம் மோசமாக நடந்துக்கொண்டுள்ளார். உனக்கு இந்த படத்தில் கேரக்டர் இல்லை என்று கூறி ரஜினிகாந்த் அவமானப்படுத்தி உள்ளார். உடனே ரஜினிகாந்த் கார் அனுப்புங்கள் என்று கூறியதற்கு, நடந்து செல்லுங்கள் என்று தரக்குறைவாக பேசியுள்ளார்.

அன்றிலிருந்து ரஜினிகாந்த் தொடர்ந்து உழைத்து அதே ஸ்டுடியோவில் சொந்தகார எடுத்து சென்று நிறுத்தியுள்ளார். இந்த செய்தியானது அந்தத் திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் கூறியதாகும். இந்த பேட்டியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.