காதலனை பழிவாங்க தூக்கில் தொங்கிய காதலி..! கடிதத்தில் அதிர்ச்சி வாக்குமூலம்

திருமணம் செய்து கொள்வதாக காதலன் ஏமாற்றியதால் காதலி தற்கொலை செய்து கொண்டது திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னையின் புறநகர் பகுதிகளில் திருவள்ளூரும் ஒன்று. இங்கு நந்தினி என்ற கல்லூரி மாணவி வசித்து வந்தார். நந்தினி அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருடன் நெருங்கி பழகி வந்தார். நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது.  நந்தினியை தினேஷ் உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்‌. இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி வந்தனர். இந்நிலையில் இருவரும் உல்லாசம் அனுபவித்தனர்.

ஏப்ரல் மாதத்தில் நந்தினி எதிர்பாராதவாறு கர்ப்பமடைந்தார். இதனை தினேஷிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் இருவரும் பல அவமானங்களை சந்திக்க நேரிடும் என்று தினேஷ் நந்தினியிடம் கூறியுள்ளார். தேசிய நம்பி நந்தினி தன்னுடைய கருவை கலைத்துள்ளார்.

கருவை கலைத்த பின்னர் தினேஷ் நந்தினியை புறக்கணிக்க தொடங்கினார். திடீரென்று ஒருநாள் நந்தினிக்கு தினேஷ் போன் செய்தார். அப்போது தனக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் நடக்கவிருப்பதாக நந்தினியிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட நந்தினி கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்.

16-ஆம் தேதியன்று இந்த சம்பவம் தொடர்பாக, தன்னுடைய உறவினரான பன்னீர்செல்வத்திடம் நந்தினி அழுது புலம்பியுள்ளார். 19-ஆம் தேதியன்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தன் மகள் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு நந்தினியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.  இந்த சம்பவமானது காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து அவருடைய அறையில் சோதித்து பார்த்தனர்.

அப்போது தான் நந்தினி தன் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தை பெற்றனர். அந்த கடிதத்தில், "நானும் அவளை உயிருக்கு உயிராக நேசித்தேன். ஆனால் அவன் எனக்கு துரோகம் செய்துவிட்டான். அவனை சும்மா விடாதீர்கள். அவன் உயிரோடு நரக வேதனையை அனுபவிக்க வேண்டும்" என்று எழுதியிருந்தார்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.