ஹாஸ்பிடலில் தண்ணீர் கூட கொடுக்கவில்லை! நாக்கு வறண்டு தான் என் புருசன் இறந்தார்! ராஜசேகரின் 2வது மனைவி வெளியிடும் ஆதாரம்!

பிரபல நடிகர் ராஜசேகர் நாக்கு வறண்டு இறந்து போனதாக அவருடைய மனைவி கூறியிருப்பது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட் திரையுலகிலும், சின்னத்திரையிலும் மிகவும் பிரபலமானவர் நடிகர் ராஜசேகர். இணை இயக்குநர், குணச்சித்திர நடிகர் என பல்வேறு பரிமாணங்களில் தமிழ் திரையுலகில் பணியாற்றியவர். "பாலைவன சோலை, மனசுக்குள் மத்தாப்பு, சின்ன பூவே மெல்ல பேசு" ஆகிய திரைப்படங்களை இயக்குநர் ராபர்டுடன் இணைந்து இயக்கினார்.

சரவணன் மீனாட்சி சின்னத்திரை தொடரின் மூலம் பட்டிதொட்டி எல்லாம் ராஜசேகர் அவர்கள் பிரபலமானார். 2 வாரங்களுக்கு முன்னர் அவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.

அவர் எவ்வாறு துடித்து இறந்தார் என்பது குறித்து அவருடைய 2-வது மனைவி தாரா கூறியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

"அவர் நெஞ்செரிச்சல் என்று கூறியதால் மருத்துவமனையில் அனுமதித்தேன். மருத்துவமனையில் சிறிது அளவிற்கு சிகிச்சை செய்துவிட்டு அவர் நன்றாக இருக்கிறார் என்று கூறினர். என்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார். வெளியே சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் மாற்றினர்.

நான் ஏன் என்று கேட்டதற்கு அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார் என்று கூறினர். நான் அவரிடம் கேட்ட போது, கீழே விழுந்து விட்டேன் என்று கூறினார். அவசர சிகிச்சை பிரிவில் நன்றாக சிகிச்சை அளித்துவிட்டு அவரை வெளியே அழைத்து வந்தனர். 2 நாட்களுக்குப் பிறகு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவர்கள் அவரை அவசர சிகிச்சை பிரிவிற்கு மீண்டும் மாற்றினர். அங்கு ஏதேதோ கருவிகளை வைத்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். என்னை அவர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை. இதயத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். நான் மேல் சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டேன்.

என்னிடம் 8 லட்சம் ரூபாய் பணம் கேட்டனர். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்று கூறியதற்கு வெளியே அழைத்து செல்லுங்கள் என்று மருத்துவர்கள் கூறினர். அப்போது கடவுள் போன்று சீரியல் இயக்குனர் விக்ரமாதித்யன் வந்து 1.5 லட்சம் ரூபாய் வரை பணத்தை செலுத்தினார். பின்னர் மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கினர். அவருடைய நுரையீரலில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

இறந்த நாளன்று காலையில் அவர் என்னிடம் தண்ணீர் கேட்டார். ஆனால் மருத்துவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்டனர். இவ்வளவு பெரிய உலகில் 2 கிளாஸ் தண்ணீர் இல்லையா என்று அழுதுகொண்டே என்னிடம் கேட்டபோது என் இதயம் சுக்கு நூறாக வெடித்தது. மருத்துவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோளாக அமைந்தது. என் கணவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்த புகைப்படமும் வீடியோவும் என்னிடம் உள்ளது. அதை விரைவில் வெளியிடுவேன்" என்று தாரா கூறினார்.

இவருடைய பேட்டியானது பொதுமக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.