செல்லும் இடம் எல்லாம் ஆண் நண்பர்கள்! சந்தியாவை துண்டு துண்டாக்கிய கணவன் வாக்குமூலம்!

செல்லும் இடம் எல்லாம் ஆண்களுடன் நெருங்கி பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசியதாக இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


சந்தியாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பாலகிருஷ்ணன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்டவன் நான். அரசியல் கட்சி ஒன்றின் , மாவட்ட செயலாளராக இருந்துள்ளேன். அப்போது என்னைவிட 18 வயது குறைவான, 16 வயதுள்ள சந்தியாவை திருமணம் செய்தேன்

எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2006 உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு எனது மனைவி சந்தியாவை சுயேட்சையாக போட்டியிட வைத்தேன். அப்போது இளைஞர்களை கவர தன்னுடைய செல்போன் நம்பர் உள்ளிட்டவற்றை சந்தியா கொடுத்துள்ளார்.

இதன் மூலம் சந்தியாவுக்கு பல இளைஞர்களின் நட்பு கிடைத்துள்ளது.  இதனை தொடர்ந்து இளைஞர்கள் பலர் சந்தியாவை சந்திக்க வீட்டுக்கு வந்து சென்றனர். சந்தியாவின் நட்பு எல்லை மீறியதால் வீட்டிற்கு  வீடு முழுக்க கண்காணிப்பு கேமரா பொறுத்தினேன்.

ஆனால் கண்காணிப்பு காமிராக்களை எடுக்க சொல்லி என் மனைவி வீட்டு வாசலில் ஆடைகளை களைந்து நிர்வாண போராட்டம் நடத்தினார்.  இதற்கிடையே சென்னை வந்த நான் 2015 ஆம் ஆண்டு எனது மனைவி பெயரில் சந்தியா கிரியேசன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி காதல் இலவசம் என்ற படத்தை தயாரித்து வெளியிட்டேன்

சந்தியாவின்  நடத்தை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே சென்றது. இதனால் அவளை கோவிலுக்கு அழைத்துச் சென்று மொட்டை போட்டுவிட்டேன்.   

கடந்த தீபாவளிக்கு முன்பு இரு குழந்தைகளையும் விட்டு ஆண் நண்பர் ஒருவருடன் சந்தியா சென்றுவிட்டாள். தூத்துக்குடி தென்பாகம் மகளிர் காவல் நிலைய போலீசார் சந்தியாவை கண்டுபிடித்து ஒப்படைத்தனர். அப்போது இருவரும் விவாகரத்து பெறுவது என்று முடிவெடுத்தோம்.  

என் மகன் பெங்களூரில் விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்துவரும் நிலையில் 5ஆம் வகுப்பு படிக்கும் மகளை, என் அம்மா வீட்டில் விட்டுவிட்டு சென்ற சந்தியா, திரைப்படங்கள், டிவி சீரியல்களில் நடிக்கும் ஆசையில், ஒவ்வொரு திரைப்பட, டிவி சீரியல் தயாரிப்பு கம்பெனியாக ஏறி இறங்கி சான்ஸ் தேடி வந்தார். இதனால். சென்னையிலும், ஆண் நண்பர்களின் சகவாசம் அதிகரித்தது.


பல முறை கூறியும் என்னை மீறி ஆண் நண்பர்கள் சாவகாசத்தை அதிகரித்த காரணத்தினால் கொலை செய்து உடல்களை துண்டு துண்டாக வெட்டி வீசினேன். திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி வீட்டுக்கு அழைத்தேன். வந்த அவர் வாய்ப்பு கேட்டு தொந்தரவு செய்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கொலை செய்துவிட்டேன்.

இவ்வாறு போலீசிடம் பாலகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.