என்னால் பலரின் கன்னங்கள் பழுத்துள்ளன..! கமலின் 41 வயது ஹீரோயின் வெளியிட்ட ஷாக் தகவல்!

தன்னிடம் தவறாக நடந்து கொண்ட பலரின் கண்ணங்களை அறைந்துள்ளதாக பிரபல பாலிவுட் நடிகை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலிவுட் நடிகைகளுள் ராணி முகர்ஜி முதன்மையானவர். நடித்துள்ள படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளன. இவர் சமீபத்தில் "மர்தாணி 2" என்ற திரைப்படத்தில் காவல்துறை ஆய்வாளராக நடித்திருந்தார். இந்தப் படத்தின் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் மும்பையில் கலந்து கொண்டார்.

அப்போது நிருபர் ஒருவர், "சினிமாவுக்கு வந்த புதிதில் உங்களிடம் தவறாக நடந்துகொண்ட அவர்களை எப்படி நீங்கள் அனுகுநீர்கள்" என்ற கேள்வியை கேட்டார். இதற்கு ராணி முகர்ஜி அளித்த பதில் அந்த விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. "சிறுவயதில் இருந்தே இத்தகைய சம்பவங்கள் நிகழும் என்பதை அறிந்திருந்தேன்.

என்னிடம் தவறாக நடந்து கொள்பவர்களின் கன்னங்களை நான் அறைந்துள்ளேன். அதன்மூலம் அவர்களின் கன்னங்கள் பழுத்தன. அவர்களின் எண்ணிக்கையை நான் கணக்கு செய்ததே இல்லை. நான் துர்காதேவியை பார்த்து வளர்ந்தவள். ஆகையால் எனக்கு எந்தவித அச்சமும் இல்லை" என்று பதிலளித்தார்.

இந்த சம்பவமானது அந்த விழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.