கிரிகெட்டுக்கு குட் பை! தென் ஆப்ரிக்காவின் ஹசீம் ஆம்லா திடீர் அறிவிப்பு! ரசிகர்கள் அதிர்ச்சி!

தென்ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் .


தென்னாபிரிக்க அணியின் ஹசிம் ஆம்லா பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர். 36 வயதான ஹாசிம் ஆம்லா இதுவரை 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9282 ரன்களை குவித்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் இவர் 28 சதங்களை கடந்துள்ளார் .

181ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஆம்லா 8113 ரன்களை எடுத்துள்ளார் . இதில் 27 சதங்களும் அடங்கும் . டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 300 ரன்களை கடந்த ஒரே தென் ஆப்பிரிக்க வீரர் இவர் ஆவார் .

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000,3000,4000,5000,6000,7000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையையும் இவர்  படைத்துள்ளார் .உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஆம்லா கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது  உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .