ஓர் ஆண்டு எண்ணெய் ஊற்றாமலே எரியும் அதிசய தீபம்! அம்பாள் அற்புதம்!

பெங்களூரு அருகே ஹாசன் என்ற ஊரில் ஆண்டுக்கு ஒரே ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் அதிசயங்கள் பல நிறைந்த ஹாசன் அம்பாள் ஆலயம் உள்ளது.


இந்த கோவிலில் சுவாமிக்கு விக்ரகம் எதுவும் கிடையாது அதற்கு பதிலாக சின்ன சின்னதாக மூன்று கற்கள் மட்டுமே மூலவராக வணங்கப்படுகிறது. இவை ஹாசன் அம்பாள் என்று அழைக்கப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இக்கோயில் திறக்கப்படும் போது மூலவரான அந்த மூன்று கற்கள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் படிந்திருக்கும். அந்த சந்தனத்தை முழுவதும் அகற்றிவிட்டு அபிஷேகம் செய்வார்கள். மேலும் சுவாமிக்கு அருகே உள்ள இரண்டு பெரிய நெய் தீபங்களிலுள்ள உள்ள நெய்யை அகற்றி விட்டு புதிதாக நெய் ஊற்றி தீபங்களை ஏற்றுவார்கள்.

இதில் அதிசயம் என்னவென்றால் இப்படி புதிதாக ஏற்றிய தீபம் அடுத்த ஆண்டு கோவில் திறக்கும் வரை அணையாமல் எரிந்து கொண்டே இருக்குமாம். மேலும் பல அதிசயங்களும் இந்த கோவிலில் உண்டு. முதலில் சொன்னது போல் சுவாமியின் மீது இருக்கும் சந்தனம் அகற்றப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த சந்தனம் சுவாமி மீது இயற்கையாகவே ஏற்படுகிறது. அபிஷேகம் முடிந்த பிறகு சுவாமிக்கு சுடச்சுட அன்னம் நெய்வேத்தியம் செய்யப்படும். மேலும் சுவாமிக்கு ஒரு குடம் தண்ணீரும் வைக்கப்படுகிறது

ஒரு ஆண்டு கழித்து மீண்டும் கோவில் திறக்கும் போது குடத்தில் உள்ள தண்ணீர் கொஞ்சம் கூட குறைந்து இருக்காது. நெய் தீபம் அணையாமல் சுடர் விட்டு பிரகாசித்தபடி இருக்கும். சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட அன்னம் கெடாமல் அதே சூட்டில் சுடச்சுட இருக்கும். சுவாமியின் மீதுள்ள சந்தனத்தை எடுத்து விட்டு அபிஷேகம் செய்து முடித்து வெறும் கற்களாகத்தான் நடை சாற்றப்படுகிறது.

ஆனால் மீண்டும் ஒரு ஆண்டு கழித்து கோவில் திறக்கும் பொழுது மூன்று சுவாமிகள் மீதும் சிவப்பு வண்ணத்தில் சந்தனம் நிரம்பி இருக்கும். இந்த அதிசயம் எப்படி நிகழ்கின்றன என்று இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.