கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது! நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!

ஒரு வார காலமாக எதிர்பார்த்திருந்த கர்நாடகா அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதலமைச்சர் குமாரசாமி அவர்கள் வாசித்து வரும் சம்பவமானது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல நாட்களாக நிகழ்ந்த வந்த அரசியல் சித்து விளையாட்டு தற்போது முடிவுக்கு வர உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து பெரும்பான்மையை நிரூபித்தது. 118 உறுப்பினர்களுடன் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றார்.

பதவியேற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு போராட்டங்களை சந்தித்து வந்தார். கூட்டணி கட்சிகளின் அடிமட்ட தொண்டர்கள் ஒன்று படாமல் இருந்தது, மத்திய அரசான பாரதிய ஜனதா கட்சியின் நெருக்கடி, சொந்த கட்சியினரிடையே பதவி சண்டை ஆகியவற்றினால் குமாரசாமியால் நிம்மதியான ஆட்சியளிக்க இயலவில்லை. பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய பங்கிற்காக பல்வேறு குறுக்கு வழிகளில் ஈடுபட்டு அரசை கலைக்க முயற்சித்தது. ஆனால் அவற்றை கூட்டணியாட்சி சமாளித்தது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு கூட்டணியாட்சிக்கு சாவு மணியாக அமைந்தது. மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் பாரதிய ஜனதா கட்சி பல்வேறு குறுக்கு வழிகளில் புத்துணர்ச்சியுடன் ஈடுபட தொடங்கியது.

சுமார் 10 நாட்களுக்கு முன்னர் 13 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் 3 மதசார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் உருவானது. கூட்டணி ஆட்சியாளர்கள் தங்களால் இயன்றவரை காலத்தை கடத்தினர். உயர் நீதிமன்றம் எவ்வளவோ முறை உத்தரவு பிறப்பித்தும் சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

நேற்றிரவு சபாநாயகர் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு குமாரசாமிக்கு உத்தரவிட்டிருந்தார். தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் மீதான தன்னுடைய உரையை குமாரசாமியை கர்நாடக சட்டப்பேரவையில் நிகழ்த்தி வருகிறார். அதில், "முதலமைச்சர் பதவியை துறப்பதானது தனக்கு எந்த ஒரு கவலையும் அளிக்கவில்லை. நான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். கூட்டணி ஆட்சியில் மக்களுக்கு அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமலில்லை.

மக்களின் கடன்களை நான் தள்ளுபடி செய்துள்ளதை இணையதளத்தின் மூலம் மக்கள் அனைவரும் அறியலாம். நான் ஜோதிடத்தை நம்பி அரசியல் செய்யவில்லை. இருப்பினும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாரதிய ஜனதா கட்சியினர் என்மீது விரும்பத்தகாத புகார்களை கூறி வந்தனர். புகார்களுக்கு அடிப்படை முகாந்திரம் இருந்தால் அவற்றிற்கு பதிலளிக்க நான் எப்பொழுதும் கடமைப்பட்டவன்" என்று உணர்ச்சி வசப்பட்டு உரையாற்றினார்.

கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகரான ரமேஷ் குமார் தன்னிடமிருந்த ராஜினாமா கடிதத்தை எடியூரப்பாவிடம் அளித்து படிக்க வைத்தார். தன்னால் சட்டப்பேரவையை அமைதியான முறையில் நடத்தி முடிக்க இயலவில்லை என்றால் அடுத்த நொடியே ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.அதே சமயம் குமாரசாமி அரசுக்கு எதிராக 105 வாக்குகள் கிடைத்தன. இதனால் கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.