ரூ.150 கோடி..! ரூ.200 கோடி..! டீலிங் தான் இப்போலாம்..! கெத்து காட்டும் ஹரி நாடார்..! ஆனால்?

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரை பனங்காட்டு படை ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் ஏமாற்றியதாக கூறப்படுவது குறித்து ஹரிநாடார் தற்போது தன்னிலை வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.


பனங்காட்டு படை ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த ஹரி நாடார் இருந்து வருகிறார். இவருக்கு சிங் நாடார் , ராஜா நாடார் , சுபாஷ் பண்ணையார் போன்ற பல முக்கிய தலைவர்களுடன் நல்ல பழக்கம். ஆனால் தற்போது ராக்கெட் ராஜா என்பவருடன் ஒன்றாகவே சுற்றித் திரிகிறார் ஹரி நாடார். இந்தியாவில் முதலீடு செய்ய நினைக்கும் வெளிநாட்டவருக்கு பாலமாக இருந்து செயல்படுவதை தான் ஹரிநாடார் தன் தொழிலாக செய்துவருகிறார்.

அதுமட்டுமில்லாமல் வட்டிக்கு விடும் தொழிலையும் ஹரிநாடார் செய்து வருகிறார். ஆனால் இவருடைய முக்கியமான தொழில் கடன் வாங்கி தருவதாக கூறி வெளிநாட்டவரயும் வெளிமாநிலத்தவர்களையும் ஏமாற்றுவது தான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக விரிவாக்கத்திற்காக கடன் பெற்றுத் தருவதாக கூறி கோடி கோடியாக பணத்தை ஏமாற்றியதாக ஹரிநாடார் மீது வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழக விரிவாக்கத்திற்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பனங்காட்டு நரி மீது புகார் அளித்துள்ளதால் போலீசார் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து ஹரிநாடார் தலைமறைவாகி விட்டார். ஆகையால் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹரி நாடார் தன்னிலை வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் தன்மீது சமீப நாட்களாக தவறான கருத்துக்கள் வதந்திகளை பரப்பி வருவதாகவும் அனைத்தும் பொய் எனவும் கூறியிருக்கிறார். பெங்களூருவை சேர்ந்த ரவீந்திரா என்பவர் தன்னுடைய தொழிலை விரிவு செய்வதற்காக 150 கோடி ரூபாய் கடனாக பெற்றுத்தருமாறு அண்ணே அனுப்பியதாக ஹரிநாடார் கூறியிருக்கிறார். 

அப்போது அதற்கு ஹரி நாடார் ஒருவருக்கு 150 கோடி ரூபாய் கடன் பெற்று தர வேண்டுமானால் குறைந்தது 200 கோடி அளவில் ரூபாய் சொத்துக்களை நாம் கணக்கில் காட்ட வேண்டும் என கூறியிருக்கிறார். அதேபோல் கடன் வாங்குவதற்கு தேவையான ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ரவீந்திரா இது போன்ற ஆவணங்களை ஹரிநாடார் இடம் சமர்ப்பிக்கவில்லை என்று கூறுகிறார்.

ரவீந்திராவிறக்கு கடன் பெற்றுத் தருவதாக கூறி வெளிநாட்டு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் ஹரி நாடார். ஆனால் ரவீந்திரா போதிய ஆவணங்களை சமர்ப்பிக்க அவர் எந்த வெளிநாட்டு நிறுவனம் கடன் தர மறுத்துவிட்டது. இதனையடுத்து ரவீந்திரா தனக்கு கடன் கிடைக்காததால் அந்த கோபத்தில் ஹரிநாடார் மீது தவறான பொய்யான வழக்குகளை அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி பதிவு செய்துள்ளதாக ஹரிநாடார் அந்த வீடியோ பதிவில் கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் முறையாக கடன் பெற வேண்டும் என நினைப்பவர்கள் தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து என் மூலம் கடன் பெற்றுக் கொள்ளலாம். நான் அவர்களுக்கு முழுமையான உதவிகளை செய்வேன் என்றும் கூறியிருக்கிறார். இது ஒரு நீதிமன்ற வழக்கு எனவும் இந்த வழக்கில் நான் தேவையான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்து என் மீது தவறில்லை என்று நிச்சயம் நிரூபிப்பேன் என்று ஹரிநாடார் அந்த வீடியோ பதிவில் கூறியிருக்கிறார்.