ஹர்திக் பாண்டியாவை சந்திக்க 7000 கிமீ தனியாக பயணித்த அம்பானி மனைவி! காரணம் இது தான்..!

லண்டனில் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வரும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா , நீதா அம்பானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவு செய்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் ஹர்டிக் பாண்டியாவை , மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி நேரில் சந்தித்து விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளார்.

விளையாட்டு வணிக உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக நீதா அம்பானி லண்டன் சென்றிருந்தார். இதனால் லண்டனில் சிகிச்சை பெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹாட்ரிக் பாண்டியாவை , அந்த அணியின் உரிமையாளர் நீதா அம்பானி நேரில் சந்தித்துள்ளார் .

இந்நிலையில் ஹர்டிக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் , லண்டனில் நீதா அம்பானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு , என்னை லண்டனில் நேரில் சந்தித்து வாழ்த்தியதற்கு நன்றி தெரிவித்தும் , உங்களது ஊக்கமளிக்கும் வார்த்தைகள் எனக்கு எப்போதுமே முக்கியமானவை என்றும் அந்த பதிவில் ஹர்டிக் பாண்டியா குறிப்பிட்டிருந்தார். 

மும்பையில் இருந்து 7000 கிமீ தொலைவில் உள்ள லண்டனுக்கு நீதா அம்பானி தனியாக சென்று ஹர்திக்கை வாழ்த்திவிட்டு திரும்பியுள்ளார். இந்த அளவிற்கு ஹர்திக்கிற்கு நீதா முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக விளையாடி வருவது தான் என்கிறார்கள்.

நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கு பெற இயலாத ஆர்டிக் பாண்டியா , அடுத்த மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.