ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடர்: ஹார்டிக் பாண்டியா வெளியே! ஜடேஜா உள்ளே!

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டி மற்றும் T20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.


ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு ஒரு நாள் போட்டி மற்றும் T20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக பங்கேற்கவுள்ளது. இந்த தொடர்களுக்கான இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா சேர்க்கப்பட்டிருந்தார். 

அனால் இவருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் T20 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரிலிருந்து பாண்டியாவிற்கு மாற்று வீரராக ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யபட்டுவுள்ளார். 

உலககோப்பைக்கு முன்னதாக இந்திய அணி விளையாடவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரவீந்திர ஜடேஜா விளையாடவுள்ளதால் அவரது திறமையை நிரூபித்து உலகக்கோப்பை அணியில் இடம்பெற இவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. 

ஹார்டிக் பாண்டியா அணியிலிருந்து விலகியுள்ளதால் மற்றொரு ஆல் ரவுண்டர் விஜய் சங்கருக்கும் இந்த தொடரில் களமிறங்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் விஜய் ஷங்கர் உலகக்கோப்பை அணியில் இடம் பெற கிடைக்கும் இந்த வாய்ப்பை சரியாய் பயன்படுத்தி கொள்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.