காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்குபெற்று பெண்களை பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொன்ன ஹார்டிக் பாண்டியா தான் கூறிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
சர்ச்சையில் சிக்கிய பாண்டியா , லோகேஷ் ராகுல்.
மேலும் இந்த கருத்தை யார் மனதையும் புண் படுத்தும் வகையில் இருந்தால் அதற்காக தான் வருந்துவதாகவும் அவர் கூறியிருக்கிறார் .
ஹார்டிக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் சில நாட்களுக்கு முன்னர் காபி வித் கரண் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் அவர்கள் பெண்களை பற்றிய பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
மேலும் இது தொடர்பாக பி சி சி ஐ இந்த சர்ச்சைக்குரிய பேச்சை பற்றி விளக்கம் அளிக்குமாறு பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுலிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் இருவரும் சச்சினை விட விராட் கோஹ்லியே சிறந்த வீரர் என்று கூறியிருந்தனர். இந்த கருத்தும் ரசிகர்களிடையே மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது