அண்ணன் பாண்டியாவுடன் ஏன் இவ்வளவு நெருக்கம்? நடிகைக்கு நேர்ந்த விபரீதம்!

கடந்த சில நாட்களாகவே பல சர்ச்சைகளிலும் கேலி கிண்டல்களிலும் சிக்கி தவிப்பவர்கள் பட்டியலில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்டியாவும் ஒருவர்.


இவர் காபி வித் கரண் நிகழ்ச்சியில் தனது நண்பரும் கிரிக்கெட் வீரருமான K .L .ராகுல் உடன் பங்கேற்றார் அப்போது பெண்களை பற்றி ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக இவர்கள் இருவருக்கும் கிரிக்கெட் வாரியம் தலா ரூ .20 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது  ஹார்டிக் பாண்டியா ipl போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.  இந்த தொடர் முழுவதுமே இவர் தன்னுடைய சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்தியில் சின்னத்திரையில் பிரபலமான நடிகை கிறிஸ்டல் டீசோசா, சமீபத்தில்  ஹார்டிக் பாண்டியாவுடன் இணைந்து  இருக்கும் விதமாக உள்ள ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவு இட்டு இருந்தார்.  புகைப்படத்தை வெளியீட்டது மட்டுமில்லாமல் கூடவே  "பிரதர் ஆப் அநாதர் மதர் " என்ற  ஒரு கேப்சன்யும் போட்டார்.  

இதனை பார்த்த நெட்சின்கள் கிறிஸ்டல் டீசோசா  மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகிய இருவரை கலாய்த்த வண்ணம் உள்ளனர்.  முடிந்தவரை ஹார்டிக் பாண்டியாவை "பிரதர்" என்று அழைப்பது தான் பாதுகாப்பானது என்று பலரும் கிண்டலாக  கமெண்ட் செய்து வருகின்றனர்.  

மேலும் இவ்வளவு நெருக்கமாக இருந்து கொண்டு எப்படி அவரை அண்ணன் என்று அழைக்கலாம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.