கலவரத்தின் போது கற்பழிப்பு! முஸ்லீம் பெண்ணுக்கு ரூ.50 லட்சம்! வீடு! அரசு வேலை!

2002-ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்தின் போது கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்குமாறு சுப்ரீம் கோர்ட் குஜராத் அரசாங்கத்தை அறிவுறுத்தியுள்ளது.


2002 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மிகவும் பயங்கரமான மதக்கலவரம் ஏற்பட்டது. குஜராத்தில் டாஹோட் மாவட்டத்திற்குட்பட்ட ரந்திபூர் என்ற கிராமத்தில் ஃபிலிக்ஸ் பாணோ என்ற பெண் வசித்து வந்தார். அந்த கலவரத்தின் போது அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அப்போது அவரை 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பலவந்தப்படுத்தி கற்பழித்தனர். மேலும் அவர் வயிற்றிலிருந்த குழந்தை உட்பட 7 பேரை கொடூரமாக கொல்லப்பட்டனர். 

இந்த சம்பவமானது அப்போது கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதைய குஜராத் அரசாங்கமானது இவருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது. ஆனால் இந்த நிவாரணத்தை ஒப்புக்கொள்ளாத பிலிக்ஸ் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். ஏப்ரல் மாதத்தில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு 50 லட்சம் ரூபாயும், 2 அரசு வேலைகளையும் தருமாறு தீர்ப்பளித்திருந்தனர்.

தீர்ப்பு வெளியாகி 5 மாதங்களான நிலையில் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீதான முன்னேற்றத்தைக் குறித்து ரஞ்சன் கோகோய் தலைமையில் உள்ள உச்சநீதிமன்ற அமர்வு விசாரணை நடத்தியது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த தீர்ப்பை மீண்டும் பரிசீலனை செய்யுமாறு கோரினர்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ரஞ்சன் கோகோய் இன்னும் 2 வாரங்களுக்குள் நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டனர். ஏற்கனவே இந்த வழக்கின் ஆதாரங்களை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாற்று ஏற்கனவே 5 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 2  மருத்துவர்களையும் பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது குஜராத் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.