இரண்டு கண்களும் தெரியாது.‌! சொன்னதை செய்து சிறுவனை நெகிழ வைத்த இமான்! குவியும் பாராட்டு!

விரைவில் திருமூர்த்தியின் குரலில் ஆத்மார்த்தமான பாடல் வெளிவரும் என்று இசையமைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நொச்சிப்பட்டி என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்றவர், விசுவாசம் படத்தில் வெளியான "கண்ணான கண்ணே" பாடலை பாடினார். இவருடைய பாட்டை செல்போனில் படம் பிடித்த ஒருவர் சமூக வலைதளங்களில் அதனை பதிவேற்றம் செய்தார். 

சமூக வலைத்தளங்களில் ஒருவர் இந்த பாடலை இசையமைப்பாளர் இமானுக்கும், பாடகர் சிட் ஸ்ரீராமுக்கும் ட்விட்டரில் டேக் செய்தார். திருமூர்த்தி என் பாடலை கேட்டவுடன் இமான் விவரங்களை பற்றி டுவிட்டரில் கேட்டுள்ளார். அதற்கு ஒருவர் திருமூர்த்தியின் விவரங்களை இமானிடம் கொடுத்துள்ளனர். உடனடியாக இமான் விவரங்களை கூறி அவருக்கு நன்றி கூறினார். மேலும் திருமூர்த்திக்கு இசை உலகில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் கூறினார். சித்ஸ்ரீராமும் திருமூர்த்தியின் குரல் வளத்தை பாராட்டினார்.

நேற்று இசையமைப்பாளர் இமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நொச்சிப்பட்டி பகுதியிலிருந்து ஒரு பாடகரை அறிமுகப்படுத்துவதற்கு நான் பெருமைப்படுகிறேன். ரத்னசிவா இயக்கும் என்னுடைய அடுத்த படமான சீறு என்பதில் அவரை பாட வைத்துள்ளேன். ஜீவா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் திருமூர்த்தி ஆத்மார்த்தமான ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாட்டின் பாடல் வரிகளை பார்வதி எழுதியுள்ளார்" என்று கூறினார்.

இந்த செய்தியானது நொச்சிப்பட்டி கிராமத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.