இறுதிச்சடங்கு! இறுதி உரை வாசித்த பாதிரியார்..! சவப்பெட்டிக்குள் இருந்து கை அசைத்த சடலம்..! பதற வைக்கும் வீடியோ!

இந்தோனேஷியாவில் உயிரிழந்த ஒருவரின் இறுதிச் சடங்கின்போது சவப் பெட்டிக்குள் இருந்து உயிரிழந்த அந்த நபரின் கை அசைந்ததைப் பார்த்து சுற்றியிருந்தவர்கள் பதறிய வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


இந்தோனேஷியாவில் மானடோ என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு ஒருவர் உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்த அந்த நபருக்கு இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. பின்னர் அவரது உடல் சவப் பெட்டிக்குள் வைக்கப் பட்டு புதைப்பதற்காக கல்லறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்பொழுது அவரை புதைப்பதற்கு தேவையான எல்லா வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது உயிரிழந்த நபரின் உடலை சவப்பெட்டிக்குள் வைத்து அதனை பள்ளத்திற்குள் வைத்துள்ளனர். 

பின்னர் பாதிரியார் உயிரிழந்த நபரின் ஆன்மா சாந்தி அடைய இறுதி உரையை வாசித்து இருக்கிறார். அந்த நேரத்தில் யாருமே எதிர்பாராத விதத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது உயிரிழந்த நபரின் உடல் சவப்பெட்டிக்குள் வைத்து மூடப்பட்டிருந்த நிலையில் திடீரென்று அவர் கை அசைந்து உள்ளது. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சற்றுநேரம் அங்கிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் நின்று உள்ளனர்.

ஒருவேளை அந்த நபர் உயிருடன் தான் இருக்கிறாரா? என்ற சந்தேகம் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும் அங்கிருந்தவர்கள் உயிரிழந்தவரின் உடலை பரிசோதித்து பார்த்தார்களா? அல்லது என்ன செய்தார்கள் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் அந்த பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபொழுது , சிலமையங்களில் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் அசைவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளனர்.