கொடூர வறட்சி! மண்ணை சாப்பிடும் மக்கள்! அதிர வைக்கும் சம்பவம்!

வறட்சி காரணமாக, மக்கள் மண்ணை உணவாக உண்ணும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.


கரீபியன் கடலில் உள்ள நாடு ஹைதி. அமெரிக்காவை ஒட்டி அமைந்துள்ள இந்நாடு ஒரு தீவாகும். இங்கு, கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்நிலையில், அந்நாட்டில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள், காசு கொடுத்து, அரிசி, காய்கறிகளைக்கூட வாங்க முடியாமல் உள்ளனர். 

இந்த வறட்சியால், பசி தாங்க முடியாத மக்கள் பலரும், மண்ணை ரொட்டி போல செய்து, அதை அடுப்பில் சுட்டு உணவாகச் சாப்பிட தொடங்கியுள்ளனர். அந்நாட்டில் கிடைக்கும் பிரத்யேக மணலை கொண்டு ரொட்டி தயாரிக்கப்படுகிறது. இந்த மண் ரொட்டிக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், மண் கிடைக்காமல் கூட பலரும் அலைய நேரிட்டுள்ளது. 

இதுதொடர்பான வீடியோ, புகைப்பட காட்சிகள் தற்போது வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில், மிக ஏழ்மையான நாடு ஹைதி. இங்குள்ள மக்களில், 50 லட்சத்திற்கும் மேலான மக்கள், சரியான உணவின்றி ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக, பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.