சாப்பாட்டில் கிடந்த ஒரே ஒரு முடி! கடுப்பான கணவன் மனைவிக்கு மொட்டை அடித்த விபரீதம்! எங்கு தெரியுமா?

சாப்பாட்டில் தலைமுடி இருந்ததால் மனைவிக்கு மொட்டையடித்த கணவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவமானது வங்காளதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்கா. இதற்கு உட்பட்ட ஜோய்பூரட் என்னும் மாகாணத்தில் பப்ளு மொண்டல் என்ற 35 வயது ஆண் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் வயது 23. இருவரும் அந்நியோன்யமாக வாழ்ந்து வந்தனர்.

சில நாட்களுக்கு முன்னர் அவருடைய மனைவி அவருக்கு இரவு சாப்பாடும், பாலும் கொடுத்துள்ளார். அவ்விரண்டிலும் முடி இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பப்ளு தன்னுடைய மனைவிக்கு மொட்டை அடித்துள்ளார். கோவத்தில் பிளேடால் அவருடைய தலைமுடியை சரைத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பப்ளு மீது குற்றம் இருப்பதை உணர்ந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அதிகபட்சமாக 14 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவமானது வங்காளதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.