அப்பா நீங்க தப்பானவர்! வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு தாயுடன் சேர்ந்து 2 மகள்கள் எடுத்த விபரீத முடிவு!

அம்மா மற்றும் 2 மகள்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு தந்தையே காரணமாக இருந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் சித்தய்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ராஜேஸ்வரி. இத்தம்பதியினருக்கு மானசா என்ற 17 வயது மகளும் பூமிகா என்ற 15 வயது மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சித்தய்யாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்த விஷயம் ராஜேஸ்வரிக்கு தெரியவந்தவுடன் கணவன் மனைவியிடையே பலத்த சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் சித்தய்யா கோபமடைந்து அவருடைய கள்ளக்காதலியுடன் சேர்ந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தார்.

இதனால் சித்தய்யாவின் முதல் மனைவி கடும் அதிர்ச்சியடைந்தார். இதனால் அவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானர். மேலும் அவர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டனர். ராஜேஸ்வரியின் அண்ணனான புட்டசாமிக்கு மானசா வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார்.

அதாவது, "ஒவ்வொருவருக்கும்  நல்ல அப்பா கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆனால் என்னப்பா எங்களின் வாழ்க்கையை சீரழித்து விட்டார்" என்று அனுப்பியிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த புட்டசாமி தங்கையின் வீட்டிற்கு பதறி அடித்து கொண்டு சென்றார். அப்போது அவர்கள் 3 பேரும் மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கி கிடந்தனர். இந்த சம்பவமானது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.