எச்.ஐ.வி. பாதித்த 10ம் வகுப்பு மாணவனை பள்ளியில் இருந்து வெளியேற்றிய கொடுமை - பெரம்பலூர் கொந்தளிப்பு

தமிழகத்தில் எச்.ஐ.வி பாதித்த மாணவன் ஒருவனை பள்ளியிலிருந்து நீக்கிய சம்பவமானது பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தற்போது கேரளாவில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவிக்கு எச்.ஐ.வி நோய் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் மகன் பெரம்பலூர் அரசு பள்ளியில் படித்து வருகிறார். 10-ம் வகுப்பு சென்றுள்ள அவருக்கு திடீரென்று எச்.ஐ.வி நோய் ஏற்பட்டுள்ளது.

எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டதால் மாணவனை பள்ளியில் சேர்க்க பள்ளி நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். மாணவனின் குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரான சாந்தாவிடம் புகார் அளித்தனர். 

தேசிய மனித உரிமை அலுவலகம் மாணவனின் நிலையை பற்றி பதிலளிக்க பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். பள்ளியின் தலைமையாசிரியர், "மாணவன் சாதாரண அளவுக்குக்கூட கல்வி கற்க இயலாத நிலையில் இருப்பதால் பள்ளியை விட்டு வெளியேற்றினோம்" என்று பதிலளித்தார்.

மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கல்வித்துறை கணவருடன் ஆலோசித்து மாணவனை பள்ளியில் சேர்க்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மாணவனின் பெற்றோர், அதே பள்ளியில் சேர்ப்பதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். எச்.ஐ.வி நோய் இருப்பது தெரியவந்துள்ளதாலும், பள்ளி நிர்வாகத்திடம் சண்டை போட்டுள்ளதாலும் அதே பள்ளியில் மகனை சேர்ப்பதற்கு பெற்றோர் மறுத்துவிட்டனர்‌.

மாவட்ட ஆட்சியர் சாந்தா நடவடிக்கையெடுத்து வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவமானது பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.