தமிழர்கள் ஏன் இந்தி கற்க வேண்டும்? உலகப் பெரும் பணக்காரர் சிவ நாடார் கூறும் காரணத்தை கேளுங்கள்!

தமிழர்கள் ஏன் இந்தி கற்க வேண்டும் என்று உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான சிவ நாடார் சில காரணங்களை கூறியுள்ளார்.


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் மூலைப் பொழி கிராமத்தை சேர்ந்தவர் சிவ நாடார். இவர் திருச்சி ஜோசப் கல்லூரியில் இளங்கலையும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலையும் பயின்றுள்ளார். மேலும் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் தற்போது முன்னிணியில் உள்ள ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனர் இவர் தான்.

சிவ நாடார் உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர். அண்மையில் திருச்சியில் உள்ள ஜோசப் கல்லூரியில் பழைய மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது.இதில் பங்கேற்க வருகை தந்த சிவ நாடார் அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது பேசிய சிவ நாடார் கூறியதாவது: 

இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு. இந்தியா பல பகுதிகளாக உள்ளது. ஆனால் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் இந்தி மொழி பேசுபவர்கள் அல்லது தெரிந்து வைத்திருப்பவர்கள். இந்தி மொழி இந்திய மாநிலங்களில் மட்டும் பேசப்படுவதில்லை. இந்தியர்கள் வசிக்க கூடிய பல்வேறு நாடுகளிலும் இந்தி மொழி பேசுபவர்கள் உள்ளனர்.

நான் பள்ளியில் படிக்கும் போது இந்தி கற்றுக் கொண்டதால் தமிழகத்தை தாண்டி மென்பொருள் நிறுவனங்களில் பணிக்கு சென்ற போது மிகுந்த உதவிகரமாக இருந்தது. எனவே தமிழக மாணவர்களும் இந்தி கற்கும் போது தமிழகத்தை கடந்து சென்றால் மிகவும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு சிவ நாடார் பேசினார்.

தமிழகத்தில் இந்தியை கட்டாயமாக்க கூடாது என்று முன்னணி அரசியல் கட்சிகள் போராட்டங்களை முன்னெடுக்க ஆயத்தமாகி வருகின்றன. ஆனால் படித்து உழைத்து முன்னேறிய ஒரு தொழில் அதிபர் இந்தியின் அவசியத்தை தற்போது எடுத்துரைத்துள்ளதாக இந்த தகவல் வைரல் ஆகி வருகிறது.