தமிழகத்தில் மலர்கிறது தாமரை டிவி! ஹெச் ராஜா ஆரம்பிக்கும் புதிய சேனல்!

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தாமரை டிவி என்கிற பெயரில் புதிய தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்க உள்ளார்.


தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களுக்கென்று தனியாக தொலைக்காட்சி சேனல்கள் வைத்திருப்பது வழக்கம். அந்த வகையில் திமுகவிற்கு கலைஞர் செய்திகள் சன் டிவி ஆகிய தொலைக்காட்சிகள் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிகள் ஆக செயல்பட்டு வருகின்றன.

இதேபோல் அதிமுகவிற்கு நியூ ஜே எனும் பெயரில் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. டிடிவி தினகரன் இது ஜெயா ப்ளஸ் என்கிற பெயரிலும் திமுகவிற்கு கேப்டன் டிவி என்கிற பெயரிலும் தொலைக்காட்சிகள் உள்ளன.

இந்த நிலையில் பாஜக சார்பில் லோட்டஸ் நியூஸ் எனும் தொலைக்காட்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்டது. ஆனால் அந்தச் சேனல் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தாமரை டிவி என்கிற பெயரில் தொலைக்காட்சி ஒன்றை தொடங்க உள்ளார்.

எச் ராஜா தனது மருமகனை வைத்து தொடங்கும் இந்த சேனலில் முதலீட்டாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. பலர் தாமரை டிவியில் முதலீடு செய்ய முன்வந்துள்ள நிலையில் விரைவில் இந்த சேனல் ஒளிபரப்பிற்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முழுக்க முழுக்க பாஜக மற்றும் இந்துத்துவ கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தாமரை டிவி செயல்படும் என்று எச். ராஜா தரப்பினர் தெரிவிக்கின்றனர்.