நெய்வேலி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கே எதிர்ப்பு தெரிவித்தோம்! விஜய்க்கு எதிராக போராடவில்லை! ஹெச்.ராஜா விளக்கம்!

பாஜக கட்சியை சேர்ந்த ஹெச்.ராஜா விஜய் "எல்லாம் எங்களுக்கு ஒரு ஆளே இல்ல" என அதிரடியாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர் . இந்த சோதனையின் முடிவில் தாங்கள் கைப்பற்றிய ஆவணங்களை பற்றிய எந்த ஒரு தகவலையும் அவர்கள் வெளியிடவில்லை. இந்நிலையில் அவர் வீட்டில் நடைபெற்ற சோதனையே சமீப நாட்களாக பேசும் பொருளாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், திமுக கட்சியினர் பொதுமக்கள் வலியுறுத்தி குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கையெழுத்து பெற்று வருகின்றனர் என கூறினார். மேலும் குடிமக்களின் தனி உரிமையில் திமுக கட்சியினர் அத்துமீறி வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர் நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை பற்றியும் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர் விஜய்க்கு எதிராக நாங்கள் ஒன்றும் போராட்டம் நடத்தவில்லை. நெய்வேலியில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என தான் போராட்டம் நடத்தினோம் என்று கூறினார். ராஜாவின் இந்த பேச்சு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.