குரு பெயர்ச்சி உங்க ராசிக்கு எப்படி? ராசிக்கு ஏற்ற பரிகார தெய்வங்கள்!

மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) தேதியின் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிகாலை 03.14 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.


குருவானவர் தனுசு ராசியில் தனது ஆட்சி வீட்டில் நின்று பல சுபச் செயல்களை இந்த வருடம் அளிக்கவுள்ளார். நடக்கவிருக்கும் குருப்பெயர்ச்சியில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்தெந்த தெய்வங்களை வழிபட்டால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்..!!

மேஷம் : சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, விநாயகர் அகவல் பாடி வர நினைத்தவை எல்லாம் கைகூடி நற்பலன்களை பெறுவீர்கள்.

ரிஷபம் : தேய்பிறையில் வரும் அஷ்டமி அன்று பைரவருக்கு மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வர சிறப்பான பலன்கள் கிடைக்கும். மிதுனம் : வாரந்தோறும் சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு மாலையில் எள் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.

கடகம் :வியாழக்கிழமைதோறும் இராகவேந்திரர் மற்றும் குருமார்களை தரிசனம் செய்துவர ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

சிம்மம் : வியாழக்கிழமைதோறும் குரு தட்சிணாமூர்த்தியை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நைவேத்தியமான பொட்டுக்கடலை வைத்து பிரார்த்தனை செய்து வர குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் உண்டாகும்.

கன்னி : மாதந்தோறும் வரும் ஏகாதசியில் விரதம் இருந்து துளசியினால் விஷ்ணுவின் அவதாரமான நரசிம்ம மூர்த்தியை வழிபட்டு வர சகல நன்மைகளையும் பெறுவீர்கள்.

துலாம் : திங்கட்கிழமைதோறும் சிவபெருமானுக்கு வில்வ இலைகள் வைத்து ஆராதனை செய்வதன் மூலம் மனதில் தன்னம்பிக்கையும், மகிழ்ச்சிகரமான உணர்வும் உண்டாகும்.

விருச்சிகம் :செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை தரிசித்து வருவதன் மூலம் மனதில் நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும்.

தனுசு :வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் பிரதோஷம் அன்று சிவபெருமானை வழிபட்டு சுண்டலை நைவேத்தியமாக வைத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் நன்மை உண்டாகும்.

மகரம் : திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசனம் செய்து வர எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கும்பம் : தேனியில் உள்ள குச்சனு}ர் சனீஸ்வர சுவாமியை வழிபட ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.  மீனம் : வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் சென்று மகாலட்சுமியை வழிபாடு செய்ய சகலவிதமான ஐஸ்வர்யங்களும் கைகூடும்.