குரு பெயர்ச்சியில் கொட்டப் போகுது பண மழை! எந்தெந்த ராசிகளுக்கு யோகம் என்று தெரிந்துகொள்ளுங்கள்!

குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.


இப்படி பெயர்ச்சி அடையும்போது அவர் பார்க்கும் ராசிகள் புனிதம் அடைந்து நன்மைகள் நடக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். குருபகவான், தான் நின்ற (ராசி) இடத்திலிருந்து 5வது ராசியையும், 9வது ராசியையும் பார்ப்பார் மற்றும் 7வது ராசியை நேர்ப்பார்வையாக பார்ப்பார். இது மட்டுமல்லாமல், தான் நின்ற ராசிக்கு அடுத்த ராசியையும் அதாவது 2வது வீடு, மற்றும் 11வது வீட்டையும் சூட்சமப் பார்வையின் மூலம் பார்ப்பார். குருபகவானின் பார்வையானது 5, 7, 9 மற்றும் 2, 11 ஆகிய ராசிகளின் மீது படும்.

ஒருவர் ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் குருப்பார்வை பட்டால் அந்த தோஷம் நீங்கும் என்பது ஜோதிட விதி. அதாவது ஒருவருக்கு திருமணத்தில் தடை இருப்பதாக இருந்தால், குருப்பார்வை படும்போது தடை நீங்கி திருமணம் கைகூடும் என ஜோதிடம் உறுதியாகக் கூறுகிறது.

விதியை மாற்றும் வல்லமை, குருபகவானுக்கு மட்டுமே உள்ளது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும், தடையற்ற பொருளாதாரம் இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். அதைத்தான் நாம் யோகம் என்கிறோம்.

மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) தேதியின் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிகாலை 03.14 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 18ஆம் (04.11.2019) தேதியன்று பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் நவமி திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் விடியற்காலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

குருவானவர் தனுசு ராசியில் தனது ஆட்சி வீட்டில் நின்று பல சுபச்செயல்களை இந்த வருடம் அளிக்கவுள்ளார். நடக்கவிருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் தடையற்ற பொருளாதாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உண்டு? என்பதை பார்ப்போம்.

ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் துலாம் மகரம் மீனம்

மேற்குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மற்ற ராசிக்காரர்களை காட்டிலும் பொருளாதார நிலை மேம்படுமே தவிர வரவுக்கேற்ற செலவுகள் அவரவர் திசாபுத்திக்கு ஏற்ப இருக்கும்.