உலக அழகிப்பட்டம் வென்ற பள்ளிக்கூடத்தில் படிக்கும் இந்திய மாணவி..! உலகையே திரும்பி பார்க்க வைத்து சாதனை!

உலகின் மிஸ் டீனேஜ் பெண்ணாக இந்தியாவை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெருமையை தந்துள்ளது.


இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மிஸ் டீனேஜ் அழகுப்போட்டி கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டு வந்தது. இந்தப் போட்டியில் கிட்டத்தட்ட 22 நாடுகளிலிருந்து இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஆயுஷி தோலாகியா என்ற பெண் அழகி பட்டத்தை வென்றுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய மகிழ்ச்சியை அரங்கிலேயே வெளிப்படுத்தினார். 

கடந்த 27 வருடங்களில் முதல் முறையாக ஆசியாவை சேர்ந்த பெண்ணொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வானது இந்திய நாட்டினரை பெரிதளவில் பெருமைப்பட செய்துள்ளது.ஆயுஷி தோலாகியாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றன.