டொயோட்டோ கார் முழுவதும் மாட்டுச் சாணம்! ஏசி தேவையில்லையாம்! விநோத ஐடியா!

கொளுத்தும் வெயிலிலிருந்து தங்கள் காரை காப்பாற்ற குஜராத் தம்பதியினர் மாட்டுச்சாணத்தை உபயோகித்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


தமிழகத்தில் தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்களால் வெயிலின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள இயலவில்லை. எப்பொழுதும் இங்கு வெயில் ஏப்ரல் மாதத்தின் நடுவிலிருந்து தொடங்கும். ஆனால் இம்முறை வெயில் பிப்ரவரி மாத இறுதியிலே தொடங்கியதனால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள மக்கள் தினுசு தினுசாக யோசிக்கின்றனர். மற்றொரு கொடுமை என்னவென்றால் வெப்பம் அதிகரித்துள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படத்தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமெதாபாத் நகரில் வசித்து வரும் கௌரங்கதாஸ் என்பவர் தன் காரை மாட்டுச்சாணத்தில் சுத்தம் செய்துள்ள சம்பவம் அனைவரையும் ப்ரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 45 டிகிரி வெப்பநிலையிலிருந்து தன் காரை பாதுகாப்பதற்கு அவரும் அவரின் மனைவியுமான ஷீஜால் ஜா காரை மாட்டுச்சாணத்தில் கழுவியுள்ளனர்.

இந்த நிகழ்வை இவர் முகநூலில் அப்ளோட் செய்துள்ளார். மக்கள் அனைவரும் இவர்களின் புதியவிதமான யோசனையை பாராட்டிவருகின்றனர்.