முதுமையைத் தடுக்கும் கொய்யாவை இரவில் சாப்பிட்டால் என்னாகும்?

ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களைவிட கொய்யா பழம் ஏராளமான சத்துக்களை கொண்டது. ஆனால் விலை குறைவாக கிடைப்பதாலும், கவர்ச்சி இல்லை என்பதாலும் கொய்யாவை பலர் விரும்புவதில்லை.


உடல் செல்களை புதுப்பிக்கும் ஆண்டாக்ஸிடென்ட் கொய்யாவில்தான் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இதனை ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்கிறார்கள்

· நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட கொய்யாவில், வைட்டமின் பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்தும் நிரம்பியுள்ளது.

        · கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதைவிட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.

* தோலை பளபளப்பாக்கவும் முதுமை தோற்றத்தைப் போக்கி இளமைத் தோற்றம் தரவும் உதவுகிறது கொய்யா.

* இப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். ரத்த சோகை நோயில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது. அதேபோன்று வாதநோய் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடாமல் தவிர்ப்பது நலம்