சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஒரே பழம் கொய்யா !!!

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு பரிந்துரை செய்யப்படும் ஒரே பழம் என்று கொய்யாவைத்தான் சொல்லலாம். பழத்தைவிட, கொய்யா காயில் அதிக சத்துக்கள் இருக்கின்றன.


·         வயிற்று உபாதைகளை நீக்கி பேதி, வாந்தி, மந்தம் போன்ற குறைகளை நீக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.

·         கொய்யா இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு ஆவி பிடித்தால் இருமல், தொண்டைக்கட்டு போன்ற பிரச்னைகள் மட்டுப்படும்.

·         வைட்டமின் சி நிரம்பியுள்ளதால் பல் மற்றும் எலும்புக்கு ஆரோக்கியம் தரும். அதனால் குழந்தைகள் நிறைய கொய்யா சாப்பிடுவது எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.