நோ சூடு..! நோ சொரணை..! வித்தியாசமாக நடந்து முடிந்த திருச்சி லால்குடி கல்யாணம்!

இளைஞர்கள் ஒரு சிலர் அவர்களது நண்பனின் திருமணத்தில் வைத்த பேனரில் நித்தியானந்தாவின் புகைப்படத்தை போட்டு புரட்சி செய்துள்ளனர்.


திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் அருகே உள்ள பல்லவபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் பங்கேற்ற மணமகனின் நண்பர்கள் ஒரு புதுவிதமான உத்தியை கையாண்டு பேனர் அடித்துள்ளனர்.

அந்த நண்பர்கள் அவர்கள் வைத்த பேனரில் மணமக்களை வாழ்த்தும் உற்றார் உறவினர்களை வரவேற்று வாசகங்களை அமைத்திருந்தனர். நண்பர்களால் வைக்கப்பட்டிருந்த பேனர் திருமணத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது . அந்த பேனரில் மணமக்களின் புகைப்படத்திற்கு அருகில் நித்தியானந்தாவின் புகைப்படமும் அவர்கள் போட்டிருந்தனர்.

நித்யானந்தாவின் புகைப்படத்தை பார்த்த திருமணத்திற்கு வந்த அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். எதற்காக நித்யானந்தாவின் புகைப்படத்தை போட்டிருக்கிறீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் அந்த பேனரில் நித்யானந்தா அடிக்கடி பயன்படுத்தும் முக்கியமான "சூடு நோ, சொரணை நோ" என்ற வாக்கியமும் இடம்பெற்றிருந்தது.

இதனைப் பார்த்த அனைவரும் குழம்பி நின்றனர் என்று தான் கூற வேண்டும். அதாவது பாலியல் வழக்கில் சிக்கியுள்ள நித்யானந்தாவை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர் . இன்னிலையில் யார் என்ன செய்தாலும் யார் என்ன சொன்னாலும் எதையுமே காதில் வாங்காமல் நான் செய்வதை தான் செய்வேன் என்று நித்தியானந்தா அவர் பாணியில் நினைத்ததை சாதித்து வருகிறார்.

தன்னுடைய மனதிற்கு எது பிடிக்கிறதோ அதையே செய்யும் நித்யானந்தாவின் கொள்கையை தங்களுக்குப் பிடித்திருப்பதாக ஆகையால் அவரை தாங்கள் பின்பற்றுவது ஆக அந்த நண்பர்கள் கூறியிருக்கின்றனர் . இது அங்கிருந்தவர்களை மிகவும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது. இது திருமண விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.