காசு கொடுக்குற மாதிரி கொடுத்தானுங்க..! அப்புறம் என்ன நடந்ததுன்னே தெரியல..! மளிகை கடை பெண்மணிக்கு 4 பேரால் ஏற்பட்ட விபரீதம்!

மளிகை கடைகளில் பெண்களை ஏமாற்றி கொடுக்காத பணத்திற்கு மீதி சில்லரை வாங்கி செல்லும் மர்ம கும்பல் சென்னையில் அதிகரித்து வருகிறது.


போரூர் மவுலிவாக்கத்தில் சம்சுதீன் என்ற நபர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்‌. இவர் நேற்று மதியம் பொருட்களை வாங்குவதற்காக பாரிமுனை கொன்றுவிட்டார். கடையில் அவருடைய மனைவியும், 2 ஊழியர்களும் இருந்துள்ளனர்.

அப்போது நபர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து, 240 ரூபாய் மதிப்புள்ள 4 சோப்புகளை வாங்கி கொண்டுள்ளார். இரண்டாவது நபர் தன்னிடம் உள்ள 500 ரூபாய் கொடுத்து ஒரு கிலோ கோதுமை மாவு கேட்டுள்ளார். முதல் நபருக்கு சில்லறை கொடுத்து கொண்டிருந்தபோது, 2-வது நபர் 500 ரூபாய் நோட்டை நீட்டி கொண்டிருந்தார். 

அதற்குள் மீண்டும் முதலாவது நபர் தனக்கு சில்லறை கொடுத்த நோட்டு கிழிந்திருப்பதாக கூறி வேறு நோட்டை வாங்கி கொண்டார். மீண்டும் அதே நபர் தன்னிடம் உள்ள மற்றொரு 200 ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார். அப்போது இரண்டாவதாக வந்த நபர் 500 ரூபாயை கொடுக்காமல் தன்னுடைய சட்டை பைக்குள் போட்டுக்கொண்டார்.

முதல் நபர் அங்கிருந்து சென்ற பின்னர், 2-வது நபர் கோதுமை மாவை வாங்கிக்கொண்டு 450 ரூபாய் மீதப்பணத்தை கேட்டுள்ளார். அவர்கள் 200 ரூபாயை பெற்றுக்கொண்டோமா என்ற குழப்பத்திலிருந்த பெண்மணி செய்வதறியாது 450 ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார். அப்போது மற்றொரு நபர் 2000 ரூபாய் நோட்டை காட்டி 10 கிலோ கோதுமை மாவு வேண்டும் என்று கேட்டுள்ளார்.

2-வதாக இருந்த நபர் தனக்கு கொடுக்கப்பட்ட நோட்டில் 50 ரூபாய் கிழிந்திருப்பதாக கூறி மாற்றிக்கொண்டார். 3-வது நபர் 2000 ரூபாய் நோட்டை உள்ளே வைத்துக்கொண்டு, கொடுக்காத நோட்டுக்கு சில்லறை கேட்டுள்ளார். மீண்டும் குழப்பம் அடைந்த அந்த பெண்மணி 1500 ரூபாய் அந்த நபரிடம் கொடுத்துள்ளார். 4-வதாக அந்த நபர் 100 ரூபாய் கொடுத்துவிட்டு, 4 காஃபி பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு சரியான சில்லரை பெற்றுக்கொண்டு சென்றுள்ளார்.

அனைவரும் சென்ற பிறகு குழப்பமடைந்த கடை பெண்மணி சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்துள்ளார். அப்போது தான் யாரிடமும் பணத்தை வாங்கவில்லை என்றும், அவர்கள் ஏமாற்றியதையும் சம்சுதீனின் மனைவி உணர்ந்துள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகாரளிக்கபட்டது. புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.