பிட்ச்சில் ஈரப்பதத்தை சரி செய்ய ஹேர் டிரையர், அயன்பாக்ஸ் பயன்படுத்திய மைதான ஊழியர்கள்! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் மழை குறுக்கிட்டதன் காரணமாக பிட்ச்சில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது.


இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற இருந்தது. ஆனால் போட்டி துவங்குவதற்கு முன்பாக சுமார் ஒரு மணி நேரம் மழை குறுக்கிட்டதால் போட்டி துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மழை நின்ற பிறகு மைதானத்தின் அவுட்கள் ஏரியாக்களில் மைதான ஊழியர்கள் துரிதமாக வேலை செய்து அந்த பகுதியில் உள்ள ஈரப்பதத்தை சரி செய்தனர்.

ஆனால் பிட்சில் ஏற்பட்ட ஈரப்பதத்தை சரிசெய்ய முடியாமல் மைதான ஊழியர்கள் ஹேர் டிரையர் மற்றும் அயன்பாக்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி ஈரப்பதத்தை சரி செய்ய முயற்சித்தனர். எனினும் பிட்ச்சில் இருந்த ஈரப்பதத்தை சரிசெய்ய இயலாத காரணத்தினால் நேற்றைய போட்டி கைவிடப்பட்டது.

உலகிலேயே பணக்கார கிரிக்கெட் போர்டுகளில் ஒன்று பிசிசிஐ. ஆனால் பிட்ச்சிலுள்ள ஈரப்பதத்தை சரிசெய்ய ஊழியர்கள் அயன் பாக்ஸ் மற்றும் ஹேர் டிரையர் பயன்படுத்திய சம்பவமானது நெட்டிசன்களால் கிண்டலடிக்க பட்டு வருகிறது.