சுவாசக் கோளாறு நீக்குதே பச்சை மிளகாய் - சைனஸ் பிரச்னைக்கு அகத்தி சாப்பிடுங்க - கறிவேப்பிலையில் இத்தனை மருத்துவ குணமா

பழைய சோறுக்கு பச்சைமிளகாய் சாப்பிட்டவர்கள் நம் தமிழர்கள். இன்று பச்சை மிளகாயைக் கண்டாலே பலரும் பயப்படுகிறார்கள்.


 பச்சை மிளகாயை தினமும் உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு நுரையீரல் பிரச்னைகள் தீர்கின்றன. சுவாசம் சீரடையும்.

·         இது உடலில் உள்ள கலோரிகளைக் குறைக்கிறது என்பதால் கெட்ட கொழுப்புகள் அழிந்துபோகின்றன. உடல் பருமன் குறையும்.

·         எதிர்பாராத ஆனந்தம், சந்தோஷ மனநிலை போன்றவைகளை பச்சை மிளகாய் தருவதால் சோர்வு, கோபம் ஏற்படும்போது உணவில் சேர்க்கலாம்.

·         ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிலைப்படுத்துவதற்கும் பச்சை மிளகாய் பயன்படுகின்றன.

சைனஸ் பிரச்னையால் அவஸ்தையா? அகத்தி சாப்பிடுங்க

எளிதில் விளையும் அகத்திக்கீரையில் அயோடின் சத்து நிரம்பியிருப்பதால் மிகவும் நல்லமுறையில் உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

·         அகத்திக்கீரை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் தொந்தரவு முற்றிலும் நீங்கும். புகையினால் வரும் கேடுகளைக் குறைக்கும்.

·         பித்தம் எனப்படும் உடல்சூட்டை தணிக்கும் சக்தி அகத்திக்கு உண்டு. அத்துடன் மலச்சிக்கலை முழுமையாக தீர்க்கக்கூடியது.

·         சைனஸ் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் வாரம் இரண்டு முறை அகத்திக்கீரை சாப்பிடுவது நல்லது. அகத்தியைப் போட்டு ஆவிபிடிப்பதும் நல்ல பலன் தரும்.

·         அகத்திக்கீரை சாற்றை தலையில் தேய்த்துக் குளித்துவர, மனநல பாதிப்புகள் குணமாகும்.


ஓசியில் கிடைக்கும் கறிவேப்பிலையில் இத்தனை மருத்துவ குணமா?

   இலவசமாக கிடைத்தாலும் கருவேப்பிலையில் எக்கச்சக்கமான மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன. அதனால் இதனை தூக்கிப்போடாமல் சாப்பிடவேண்டியது அவசியம்.

·         இதனை தினமும் சாதத்தில் கலந்து சாப்பிட்டால் முடி கொட்டுவது நிற்கும். தேங்காய் எண்ணெயில் போட்டு தேய்ப்பதும் பலன் தரும்.

·         புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு.

·         கறிவேப்பிலையை பொடிசெய்து சாப்பிட்டால் ஜீரணக் குறைபாடு நீங்குவதுடன் பசியின்மை நீங்கும்.

·         உடலில் நல்ல கொழுப்பு அதிகரிப்பதற்கு கறிவேப்பிலை போன்று உதவும் பொருள் வேறு எதுவும் இல்லை.